கழக முப்பெரும் விழாவை முன்னிட்டு,
மாநகர் மாவட்ட தி.மு.க சார்பில் கோவை, பீளமேடு
மசக்காளிபாளையம் பாலன் நகர் அருகில் சுற்றுப்புறச் சூழல், இரத்ததானம் விழிப்புணர்வு ” 4 கி. மீ., 6 கி. மீ., 10 கிமீ., தொலைவு மாரத்தான் ஓட்டப் பந்தயப் போட்டிகளை
மாநகர் மாவட்ட தி.மு.க செயலாளர் நா கார்த்திக் ex.எம்.எல்.ஏ., கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்த மாரத்தான் போட்டியில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் 10,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள், பொதுமக்கள் மாரத்தான் ஓட்டப் பந்தயப் போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் மெடல் மற்றும் முதல் மற்றும் இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.