இன்று இந்த கோவிலில் வாகனங்கள் செல்ல தடை.!!

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மலைப்பாதையில் இன்று இரு சக்கர – நான்கு சக்கர வாகனங்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மருதமலை சுப்பிரமணியசாமி கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நடந்து வருவதால் மலை மேல் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் போதிய வாகனங்கள் நிறுத்த வசதி இல்லை. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிக பக்தர்கள் வருவார்கள். நெரிசலை தவிர்க்க இன்று ஒரு நாள் மட்டும் மருதமலை மலைப்பாதையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள் படிக்கட்டு வழியாகவும் ,கோவில் பஸ் மூலமாகவும் மலை மேல் உள்ள கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்யலாம் .இவ்வாறு கூறப்பட்டுள்ளது