கல்லூரி மாணவர்கள் மோதல் :இரும்புத் தடியால் தாக்கிஒருவர் படு காயம்

3 பேருக்கு வலை.கோவை ஆகஸ்ட் 28 உடுமலை பக்கம் உள்ள கண்ணமநாயக்கனூரை சேர்ந்தவர் செய்ய து . . இவரது மகன் மொகைதீன் இப்ராஹிம் ( வயது 18)பொள்ளாச்சியில் உள்ள தனியார்கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்கு தினமும் பஸ்சில் சென்று வருகிறார்.நேற்று இவர் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வருவதற்காக பொள்ளாச்சி – உடுமலை ரோட்டில் உள்ள கல்லூரி அருகே பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த 3மாணவர்கள் முன் விரோதம் காரணமாக இவரை இரும்பு கம்பியால் தாக்கினார்கள் .இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளார் இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு பகுதி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது போலீசார் கல்லூரி மாணவர்கள் நவீன், விக்னேஷ் ,ரீதுஸ் ஆகியோர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.