கோவை செப்டம்பர் 2 கோவை குனியமுத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அழகுமாரி செல்வம் நேற்று முன்தினம் நள்ளிரவில் புட்டு விக்கி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை ( எண் 1775)அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது நள்ளிரவில் கடை அருகே மது பாட்டில்களை பூமிக்கு அடியில் பதுக்கி வைத்துபதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்ததுகண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் நீலமலை மங்கலம் காளிதாஸ் (வயது 36) கைது செய்யப்பட்டார் இவரிடமிருந்து 33 மது பாட்டில்களும் மதுவிற்ற பணம் ரூ 4.280 கைப்பற்றப்பட்டது இவர் அந்த டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இதேபோல கோவை செல்வபுரம் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை (எண் 1674 )அருகேகள்ள சந்தையில் மது விற்றதாக திருச்சி மாவட்டம் சொரியாம்பட்டி சேர்ந்த சங்கர் (வயது 36 |கைது செய்யப்பட்டார் .இவரிடம் இருந்து 34 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதுபோத்தனூர் சாரதா மில் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைஅருகே மது விற்றதாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் (வயது 24)கைது செய்யப்பட்டார் 20 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0