யானை தாக்கி தபால் ஊழியர் பரிதாப சாவு

கோவை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் டேம் பகுதியில் தபால் நிலையம் உள்ளது. இங்கு மேட்டுப்பாளையம் சிராஜ் நகரை சேர்ந்த சுப்பையன் (வயது 59)தபால் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.இவர் தினமும் நெல்லித்துறையில் இருந்து தபால்களை எடுத்துக்கொண்டு வனப்பகுதி வழியாக பில்லூர் அணைக்கு செல்லும் வழியில் உள்ள கிராம மக்களுக்கு தபால்களை வழங்குவது வழக்கம் அதன்படி அவர் நேற்று தபால் கொடுக்கும் பணிக்கு சென்றார். மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறை ஊழியர்கள் நெல்லித்துறையிலிருந்து பில்லூர் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நெல்லித்துறை காப்புக்காடு டமால் சரக பகுதியில் சுப்பையன் பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தெரியவந்தது இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சின்னக்காமண்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். காட்டு யானை தாக்கி தபால் ஊழியர்பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.