கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இன்று போர்க்கால ஒத்திகை.

கோவை மே 7 காஷ்மீரின் பஹல் காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் இன்று ( புதன்கிழமை) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.பாதுகாப்பு ஒத்திகையின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையும் எதிர்கொள்ளும் வகையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தீவிரமாக எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு உளவியல் ரீதியாகவும், போர்க்கால சூழல் எதிர்கொள்ளவும் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது .ராணுவ பாதுகாப்பு தளவாடங்கள் உள்ள இடங்கள், அணு மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. கோவை சூலூரில் விமானப்படை பயிற்சி மையம் உள்ளது. இங்கு இலகுரக விமானங்களான தேஜஸ் உள்ளிட்ட போர் விமானங்கள்  மூலம் பயிற்சி அளிப்பதுடன் போர் மூலம் பகுதிகளுக்கு பறந்து சென்று தாக்குதல் நடத்தவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் போர்க் கால பாதுகாப்பு ஒத்திகையை தொடர்ந்து கோவை விமான நிலையம் உஷார் படுத்தப்பட்டுள்ளது.மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் தயார் நிலையில் இருக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.