என்னா குளுருடா சாமி!! ஜில்லென்று மாறிய தமிழ்நாடு..!!

டகிழக்கு பருவமழை சற்றே ஓய்வெடுத்துள்ள நிலையில், தற்போது பனிக்காலம் உச்சத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் தற்போது குளிர் வாட்டி வதைத்து வருகிறது.

இதனால் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் இருப்பதை போல குளிர்ந்த சீதோஷ்ன நிலை பிற நிலப்பகுதிகளிலும் நிலவுகிறது.

டிசம்பர் 25ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

இதனிடையே தமிழகத்தில் நிலவும் குளிர் அலை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டில் நேற்று (டிசம்பர் 21) குறைந்த வெப்பநிலை பதிவாகியிருக்கும் பகுதிகள் மற்றும் தென் ள் மாநிலங்களில் குறைந்த வெப்பநிலை பதிவாகியிருக்கும் பகுதிகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தென் இந்தியாவிலேயே மிக குறைவாக வெப்பநிலை பதிவாகியிருப்பது உதகையில் தான் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். உதகையில் நேற்றைய (டிச.21) தினம் 6.4 டிகிரி வெப்பநிலை பதிவாகியிருக்கிறதாம்.

நேற்று 11 டிகிரிக்கு குறைவான வெப்பநிலை பதிவாகியிருக்கும் இடங்கள் 

ஊட்டி – 6.4
ஹாசன், கர்நாடகா – 7.5
இடுக்கி (ஆனையிறங்கல்), கேரளா – 7.6
கொடைக்கானல் – 7.9
குன்னூர் – 8.0
வால்பாறை – 8.5
அரக்கு (ஆந்திரா) – 8.8
ஏற்காடு – 9.0
வயநாடு (கபனிகிரி), கேரளா – 10.5
அகும்பே, கர்நாடகா – 11.1
லம்பசிங்கி, (ஆந்திரா) – 11.2
சிக்மகளூர் (முடிகெரே), கர்நாடகா – 11.2

தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி – 10.6
தாளவாடி, ஈரோடு – 11.1
மொரப்பூர், தர்மபுரி – 13.0
தொடாமுத்தூர், கோவை – 13.3
திண்டுக்கல் – 13.3
குன்னத்தூர், கோவை – 13.4
ரெட்டியசத்திரம், திண்டுக்கல் – 13.4
கிருஷ்ணகிரி – 13.5
பொள்ளாச்சி, கோவை – 13.6
பாலக்கோடு, தர்மபுரி – 13.8
கிணத்துக்கடவு, கோவை -14.2
ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் – 14.2
எடப்பாடி, சேலம் – 14.3
ஹரூர், தர்மபுரி – 14.4
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி – 14.7
வாழப்பாடி, சேலம் – 14.7
சூளகிரி, கிருஷ்ணகிரி – 14.8
பெரியநாயக்கன்பாளையம், கோவை – 14.8
திருப்பத்தூர் – 15.0
திருப்பூர் – 15.0
பெரம்பலூர் – 15.0
நத்தம், திண்டுக்கல் – 15.2
தருமபுரி – 15.5
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி – 15.5
கோவில்பட்டி, தூத்துக்குடி – 15.8
நாகர்கோவில், கன்னியாகுமரி – 15.9
கரூர் – 16.0
கோவை ஆந்திரா – 16.2
கடவூர், கரூர் – 16.2
மதுரை AP – 16.5
நெய்வேலி, கடலூர் – 16.6
சந்தியூர், சேலம் – 16.7
சேலம் – 16.9

தமிழ்நாட்டில் 20.5 டிகிரிக்கும் குறைவாக வெப்பநிலை பதிவான கடலோர பகுதிகள்:

தூத்துக்குடி – 19.2
கடலூர் – 19.5
அதிராமபட்டினம் – 19.6
திருவாரூர் – 20.0
பாண்டி – 20.2
பரங்கிப்பெட்டி – 20.2
நாகப்பட்டினம் – 20.2

தெற்கு தீபகற்பத்தில் உள்ள பெருநகரங்களின் வெப்பநிலை:

ஹைதராபாத் – 12.2
பெங்களூர் AP- 13.2
பெங்களூர் – 14.7
சென்னை AP – 22.2
சென்னை – 22.6