மனைவி அடித்து கொலை..!

கோவை அருகே உள்ள வீரகேரளத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் ( வயது 53) ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி பேபி ( வயது48) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் தேவராஜ்க்கு சொந்தமாக சரக்கு வேன் வாங்க ஆசை ஏற்பட்டது .அதை அவர் தனது மனைவியிடம் தெரிவித்தார். உடனே 2பேரும் சேர்ந்து சரக்கு வேன் வாங்க முன்பனமாக கொடுக்க ரூ.20 ஆயிரத்தை தயார் செய்தனர். அந்த பணத்தை ஜெயராஜ் தனக்கு தெரிந்த ஒருவரிடம் கொடுத்து சரக்கு வேன் வாங்கி தரும்படி கூறியுள்ளார். ஆனால் அதை வாங்கி கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது .இதனால் இந்த பணத்தை தேவராஜ் நண்பர் செலவழித்து விடுவாரோ என்ற பயம் பேபிக்கு ஏற்பட்டது .எனவே அவர் கொடுத்த பணத்தை கணவரிடம் திரும்ப கேட்டார். இந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி இரவு வழக்கம் போல கணவன் – மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தேவராஜ் தனது மனைவியை சரமாரியாக தாக்கினார் .இதில் அவர் காயம் அடைந்தார் .அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அப்போது டாக்டரிடம் கட்டிலில் இருந்து தவறி விழுந்துவிட்டதாக தெரிவித்தார். அத்துடன் அவர் தனது மனைவியின் சகோதரியான லட்சுமியிடம் இதே காரணத்தை கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த லட்சுமி தனது அக்காள் மகள்களிடம் விசாரித்துள்ளார். அப்போது அப்பா தான் தனது தாயை பலமாக தாக்கியதாகவும், இதை வெளியே சொல்ல கூடாது என்று கூறினர் . இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமி இந்த சம்பவ குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் தேவராஜ் தலைமறைவானார். இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பேபி கடந்த 3-ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் வடவள்ளி போலீசார் இந்த வழக்கை கொலை வழக்கமாக மாற்றி தலைமறைவாக இருந்த தேவராஜை தேடி வந்தனர். வீட்டின் அருகே பதுங்கி இருந்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.