மனைவியின் 80 பவுன் நகை மோசடி,சாவில் மர்மம்!!

தலைமை ஆசிரியர் எஸ்.பி.யிடம் புகார்.கோவை ஜூலை 24 கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையை சேர்ந்த முருகேசன். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.இவர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:- எனது மனைவி சாந்தினி. இவர் உடற் கல்வி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் .எனது மனைவிக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தது. அவரது சிகிச்சைக்காக போத்தனூர் தனியார் மருத்துவமனைக்கு சென்று வந்தோம். அப்போது என் மனைவியின் உறவினர் எனக்கு சொந்தமான 80 பவுன்நகைகளை எனக்கு தெரியாமல் வங்கியில் எனது மனைவியை பயன்படுத்தி பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து மனைவியின் வாரிசுதாரராக எனது பெயரை குறிப்பிடாமல் உறவினர் பெயரை வாரிசுதாரர் என்று குறிப்பிட்டுள்ளனர். இதை தொடர்ந்து எனது மனைவியின் இறப்புக்கு பின் 80 பவுன் நகையை கையால் செய்துவிட்டனர். வீட்டில் இருந்த பொருட்களையும் திருடி சென்றுள்ளனர். எனக்கு வாரிசு இல்லாதால் எனது எஞ்சிய சொத்துக்களையும் அபகரிக்கும் நிலை உள்ளது. மேலும் எனது மனைவியின் சாவிலும் சந்தேகம் உள்ளது .ஆகவே இது குறித்து விசாரிப்பதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நகையையும், பொருட்களையும் மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாகதீவிர விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டறியுமாறு எஸ். பி. டாக்டர். கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.