வங்கியில் அடகு வைத்த தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகை வழங்கியதாகபெண் புகார்.

கோவை மே 7 கோவை பக்கம் உள்ள சூலூர் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் விஜி ( வயது 40 )இவர் கோவையில் உள்ள ஒரு வங்கியில் தனது நகைகளை அடகு வைத்து கடன் வாங்கினார். பின்னர் அவர் கடந்த 3ஆம் தேதி நகைகளை திருப்பினார். அப்போது வங்கி அதிகாரிகள் அடகு வைத்த நகைகளை கொடுத்தனர் .அதை வாங்கிய அந்தப் பெண் அதில் ஒரு தங்க வளையலை தவிர மற்ற 4 வளையல்கள் கவரிங் எனக் கூறி தகராறு செய்தார் .இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது . அந்த பெண் அளித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.