பொங்கல் தொகுப்புடன் ரூ.4 கோடியே 62 லட்சத்து 87 ஆயிரம் பரிசு தொகை வழங்கும் பணி தீவிரம்..!

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புடன் கூடிய ரொக்கம் ரூபாய் 3 ஆயிரம் ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் அந்தந்த ரேசன் கடைகளில் இன்று முதல் வழங்குவதை முன்னிட்டு வால்பாறை கோ ஆப்பரேட்டிங் காலனியில் உள்ள சிந்தாமணி அங்காடியில் வட்டாட்சியர் அருள் முருகன், நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளரும் 4 வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான ஜே.பி.ஆர்.என்ற பாஸ்கர் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது இந்நிலையில் வால்பாறையில் உள்ள மொத்தம் 15 ஆயிரத்து 429 குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும் பரிசு தொகை மொத்தம் 4 கோடியே 62 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ள நிலையில் அந்தந்த பகுதிகளில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் இன்று இப்பணி துரிதமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது