பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளி சடலம்..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கரியா காளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 45) கூலித்தொழிலாளி இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை .தனியாக வசித்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இவர் கடந்த 4-ம் தேதி அளவுக்கு அதிகமாக மது குடித்து இவரது வீட்டில் இறந்ததாக கூறப்படுகிறது.. இந்த நிலையில் இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்த போது சசிகுமார் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா பிரியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.