நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், ரூ.27.25 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகளை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின்
பயன்பாட்டிற்காக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், ரூ.27.25 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படவுள்ள குடிநீர் திட்டப்பணிகளை, மாண்புமிகு தமிழ்
வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் (23.10.2025) குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்,
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
அமைச்சர் தெரிவித்ததாவது நீலகிரி மாவட்டம் உதகை இந்து நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள அரசு
மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு, வற்றாத நீர் ஆதாரத்திலிருந்து
நாளொன்றிற்கு 1.70 மில்லியன் லிட்டர் நீர் விநியோகம் வழங்க கோரி மருத்துவக்கல்வி இயக்குநர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம்
வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று, இத்திட்ட பணிக்காக ரூ. 27.25 கோடி நிதி
ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது சார்பாகவும், மாவட்ட மக்களின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை
தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்,
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, நிர்வாகப் பொறியாளர் பொதுப்பணித்துறை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி கலந்து முடிவு செய்து குடிநீரின் தேவை நாளொன்றிற்கு 0.79 மில்லியன் லிட்டர்
என திருத்தப்பட்டு, குடிநீர் வழங்கும் பணிக்காக ரூ.27.50 கோடிக்கு
தோராயமான செலவு மதிப்பீடு அனுப்பப்பட்டு, தலைகுந்தாவில் உள்ள முத்துநாடு
மந்து அருகே உள்ள அணையிலிருந்து DI D/F குழாயைப் பயன்படுத்தி 70 மீட்டர்
(35 மீட்டர் 2 எண்ணம்) குழாய் வழியாக 0.91 மில்லியன் லிட்டர் நீரை
அணையின் கரையில் 4.50 மீட்டர் விட்டம் மற்றும் 15 மீட்டர் ஆழம் கொண்ட
சேகரிப்பு கிணறு மற்றும் பம்ப் ஹவுஸுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, 200 மிமீ DI K7
/ K9, 200 மிமீ HDPE PN 10 / PN 8 / PN 6 குழாய்களைப் பயன்படுத்தி 4.72 கி.மீ.
க்கு நீரை (16 மணி நேரம்) பம்ப் செய்ய உத்தேசிக்கப்பட்டு, 948 1pm வேகத்தில்
VT பம்ப் செட் மூலம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் செலுத்தப்பட்டு
நாளொன்றிற்கு 0.91 மில்லியன் லிட்டர் அளவுள்ள நீர் சுத்திகரிக்கப்படும். இந்த
சுத்திகரிப்பு நிலையமானது ஏரேட்டர், மெதுவான மணல் வடிகட்டி மற்றும் 8.70 LL
தெளிந்த நீர் தேக்க தொட்டியை கொண்டுள்ளது.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 12 மணி நேரம் பம்பிங் செய்யப்படும்.
தெளிந்த நீர் தேக்க தொட்டியிலிருந்து, அரசு மருத்துவமனையில் உள்ள
2 தொட்டிகள் மற்றும் மருத்துவக் கல்லூரியில் உள்ள 2 தொட்டிகளுக்கு முறையே
1570 மீ மற்றும் 830 மீ நீளத்திற்கு 200 மிமீ மற்றும் 150 மிமீ DI K7 குழாய்களைப்
பயன்படுத்தி HSC பம்ப்செட் மூலம் 1105 LPM க்கு எதிராக 22 மீ ஹெட் மூலம்
தண்ணீர் பம்ப் செய்யப்படுகிறது. இதன் மூலம் உதகை அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனைக்கு தேவையான குடிநீர் கிடைக்கப்பெறும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார் இந்நிகழ்ச்சியில், அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன்
மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், கழகப் பொறுப்பாளர் கே எம் ராஜு, உதகை நகராட்சி தலைவர் வாணிஸ்வரி, துணைத் தலைவர் ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் நாசர்அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பி இஸ்மாயில் M. C,
மேற்கு நகர செயலாளர் ஜே எஸ் ரமேஷ், குன்னூர் நகராட்சி துணைத் தலைவர் வசிம் ராஜா, நகர மன்ற உறுப்பினர் எலிக்கல் ரவி,
காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத்துறை மாவட்ட தலைவர் மனிஷ் சந்திரன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செல்வகுமார், பொதுப்பணித்துறை
செயற்பொறியாளர் ரமேஷ்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
முதல்வர் ஸ்ரீசசரவணன், இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர்,
உதகை நகராட்சி ஆணையாளர் கணேஷ், குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர்
சங்கீதா, திட்டக்குழு உறுப்பினர் ராமசாமி உட்பட மருத்துவத்துறை அதிகாரிகள் மருத்துவக் கல்லூரி அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்