நகை கடையில் தங்க நெக்லஸ் மாயம்.ஊழியர் மீது போலீசில் புகார்

கோவை அக்டோபர் 8 கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஒரு நகைக்கடையில்மாதாந்திர நகை தணிக்கை நடந்தது. அப்போது 30.400கிராம் எடை கொண்ட தங்க நெக்லஸ் மாயமானது தெரியவந்தது..நகை கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி. டி.வி கேமராவை ஆய்வு செய்தபோது அந்த கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்த அபிஷேக் குமார் என்பவர் அந்த நகையை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நகைக்கடை மேனேஜர் பாலக்குமார் காட்டூர் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் பாண்டியன் வழக்கு பதிவு செய்து நகைக்கடை ஊழியர் அபிஷேக்குமாரை தேடி வருகிறார்.