மருதமலையில் கந்த சஷ்டி விழா

மலைப்பாதையில் 27, 28- – ந் தேதிகளில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. கோவை அக்டோபர் 16 கோவை மருதமலை அருள்மிகு. சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை ஆணையர் செயல் அலுவலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது :- மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வருகிற 27 மற்றும் 28-ந் தேதிகளில் கந்தசஷ்டி சூரசம்காரம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது அதில் பக்தர்கள் திரளாக கலந்து கலந்து கொள்வார்கள். இதையொட்டிஅந்த 2 நாட்களுக்கு மலைப்பாதையில் இருசக்கர வாகனம், மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. பக்தர்கள் மலைப் படிகள் வழியாகவும், கோவில் பஸ் மற்றும் கோவில் மூலம் ஏற்பாடு செய்த பஸ்களில் சென்று சாமி தரிசனம் செய்யலாம் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.