காரில் வந்தவரை வழிமறித்து தாக்குதல்

4 பேர் மீது வழக்கு .கோவை செப்டம்பர் 11 கோவை துடியலூர் அருகே உள்ள இடிகரை “சன்ரைஸ் ” கார்டனை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 56 )இவர் நேற்று காரில் ராக்கிபாளையம் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்த ஒருவர் காரை முந்தி சென்று வழிமறித்து நிறுத்தினார். பின்னர் அவரிடம் ஏன் வேகமாக ஓட்டி செல்கிறாய்? என்று கேட்டு தகராறு செய்து அவரை தகாத வார்த்தைகளால் பேசி,தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சீனிவாசன் துடியலூர் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் குரு கணேஷ் இது தொடர்பாக விசாரணை நடத்தி விக்னேஷ் உட்பட 4பேர் மீது வழக்கு பதிவு செய்துதேடி வருகிறார்.