கோவிலுக்குச் சென்றபோது வீட்டின் பூட்டை உடைத்து நகை – பணம் திருட்டு

கோவை செப்டம்பர் 20 கோவை செல்வபுரம் தேவேந்திர வீதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் .இவரது மகன் சசிக்குமார் ( வயது 35 )இவர் கடந்த 19 – ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்றிருந்தார். வீட்டின் சாவியை அவரது சகோதரி வீட்டில் கொடுத்து வைத்திருந்தார். இந்த நிலையில் யாரோ அவரது வீட்டில் பூட்டை உடைத்து அங்கிருந்த 40 கிராம் தங்க நகைகள் ,பணம் ரூ. 10,000 ஆகியவற்றை திருடி சென்று விட்டனர் .இது குறித்து சசிகுமார் செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.