போலீசாக நடித்து தனியார் நிறுவனஊழியர் வீட்டில் கொள்ளை முயற்சி. 2 பேருக்கு வலை.

கோவை செப்டம்பர் 15 கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 40 )தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது டிப்-டாப் உடை அணிந்த 40வயது மதிக்கத்தக்க 2 பேர் திடீரென்று வீட்டுக்குள் வந்தனர். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து செந்தில்குமார் அவர்களுடன் நீங்கள் யார்? என்று கேட்டார். அதற்கு தாங்கள் போலீஸ் என்று கூறியுள்ளனர் .உடனே அவர் உங்களின் அடையாள அட்டையை காட்டுங்கள் என்று கேட்டுள்ளார் .ஆனால் அவர்கள் 2 பேரும் தங்களிடம் இருந்த அடையாள அட்டை காட்டினார்கள். பின்னர் அவர்கள் நீங்கள் வங்கியில் அதிக அளவில் பண பரிமாற்றம் செய்தது தொடர்பாக உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் .எனவே எங்களுடன் காவல் நிலையத்துக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளனர் .அதற்கு அவர் உடையை மாற்றி விட்டு வருவதாக கூறியுள்ளார். அவரை பின்தொடர்ந்து அந்த 2 பேரும் சென்றனர். இது பற்றி செந்தில்குமார் கேட்க முயன்றார். உடனே அந்த 2பேரும் திடீரென்று செந்தில்குமாரின் கழுத்தை பிடித்து நெரித்து உன் வீட்டில் நகை பணம் எங்கு உள்ளது ?அதை சொல்லாவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இதனால் சுதாரித்துக் கொண்ட செந்தில் குமார் அவர்களிடம் இருந்து தப்பி அங்குள்ள ஒரு அறைக்குள் சென்று கதவைஉள் பக்கம் பூட்டி கொண்டார் .பின்னர் அவர் செல்போன் மூலம் அக்கம் -பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். இதை அறிந்த மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் .இது குறித்து செந்தில் குமார் வடவள்ளி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வருகிறார்கள். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில்பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்