கடன் தொல்லையால் அரசு பள்ளிக்கூட தலைமை ஆசிரியை தூக்கு போட்டு தற்கொலை

கோவை அக்டோபர் 8 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் செல்வகுமார வீதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். எலக்ட்ரீசியன் இவரது மனைவி ஈஸ்வரி ( வயது 46) இவர் பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு கிருத்திக், அஸ்வின் ஆகிய 2 மகன்கள் உள்ளனர் .இந்த நிலையில் ஈஸ்வரி பள்ளியில் இருந்து நேற்று மதியம் வீட்டிற்கு சென்றார் .தொடர்ந்து மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த மகன் கிருத்திக் தாய் ஈஸ்வரி மின்விசிறியில் சேலையை கட்டி தூக்கி தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.. இதை யடுத்துஅக்கம் பக்கம் உள்ளவர்கள் ஈஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் .அவரது உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது இது குறித்து பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தினர். விசாரணையில் ஈஸ்வரி குடும்பத்தினர் கடன் வாங்கி புதிதாக வீடு கட்டியுள்ளனர். தொடர்ந்து ஏற்பட்ட கடன் தொல்லை காரணமாக அவர் மனம் உடைந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. .இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். கடன் தொல்லை காரணமாக அரசு பள்ளி தலைமை ஆசிரியை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.