கல்லூரி பேராசிரியர் வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை

கோவை அக்டோபர் 22 கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் இந்திரா நகர், மேகவல்லி வீதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் ( வயது 36 )இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார் .இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் பெருமாள் கோவில்பட்டிக்கு குடும்பத்துடன் சென்றார். நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்க்க போது பீரோவில் இருந்த 45 பவுன் தங்க நகைகளை காணவில்லை யாரோ திருடி சென்று விட்டனர்.அதன் மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும். இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பீரோவில் பதிந்திருந்த கொள்ளையர்கள் கைரேகை பதிவு செய்யப்பட்டது. அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில்பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.