பள்ளி வளாகத்தில் குரங்கு கடித்து மாணவி படுகாயம்

கோவை செப்டம்பர் 10 கோவை மாவட்டம்அன்னூரில் தெற்கு தொடக்கப் பள்ளிக்கூடம் உள்ளது இங்கு நேற்று மதியம் இடைவெளியின் போது சில குரங்குகள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்தன .இந்த குரங்குகள் வெளியே நின்ற மாணவிகளை துரத்தின .அப்போது ஒரு குரங்கு அந்த பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவி சலீமாவை முதுகு பகுதியில் கடித்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை ஆசிரியர்கள் மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது .இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அன்னூர் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், மேட்டுப்பாளையம் வனத்துறை சேர்ந்த வனவர் சிங்காரவேலு, வனக்காப்பாளர்கள் ஹக்கீம், தேவேந்திரன், வட்டார கல்வி அலுவலர் ஜோசப் ஆகியோர் அங்கு ஆய்வு செய்தனர். இதை யடுத்து அந்த பகுதியில் நடமாடும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.