கஞ்சா கடத்திய3 பேர் கைது

கோவை செப்டம்பர் 4 கோவை துடியலூர் அருகே உள்ள நாதே கவுண்டன்புதூர் ,சுடுகாட்டு பகுதியில் துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா நேற்று மாலை ரோந்துசுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் ஒரு கிலோ 350 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும், 2இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது இது தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டனர் விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டம் திருத்தாங்கலை சேர்ந்த அருணாச்சலம் (வயது 18 )நெல்லை பேட்டையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 23 )நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த கௌதம் ( வயது 19 )என்பது தெரியவந்தது . 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.