கோவை கலெக்டர் ஆபீஸ் முன் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை செப்டம்பர் 4 கோவையை அடுத்த கிணத்துக்கடவு பக்கமுள்ள மகாராஜாஸ் மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் உள்ளது.இந்தக் கல்வி நிறுவனம் அரசு அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும் ,அந்த கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பாதிக்கப்பட்ட மாணவர்களை வேறு கல்லூரியில் சேர்ப்பதோடு சான்றிதழ் கல்வி கட்டணம் இழப்பீடு ஆகியவற்றை பெற்றுத் தர கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் கோவை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய மாணவர் பெரு மன்ற மாநிலசெயலாளர் தினேஷ் தலைமை தாங்கினார்..