பழனியில் உள்ள யமஹா ஷோரூம் இல் புதிய யமஹா மாடல் பைக் அறிமுக விழா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் யமஹா ஷோரூம் இல் புதிய யமஹா பைக், எக்ஸ் எஸ் ஆர் 155 அறிமுக விழா நடைபெற்றது.இதில் நான்கு வகையான வண்ணம் கொண்ட புதிய பைக்குகள் அறிமுகப்படுத்தப் பட்டது.இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பழனி ஆர் டி ஓ ஸ்ரீதர் , வணிகர் சங்க பேரமைப்பின் பொறுப்பாளர்கள் ஜே பி சரவணன், கன்னிச்சாமி , மற்றும் பலரும் கலந்து கொண்டனர். இவர்களை பழனி யமஹா சோறும் உரிமையாளர் வினோத் வரவேற்றார்.

இந்த அறிமுக விழாவில் பேசிய ஆர் டி ஓ, புது பைக்குகள் வாங்குபவர்கள் 18 வயதிற்கும் மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் அவர்கள் டூவீலர் லைசன்ஸ் வாங்கியவர்களாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் yamaha பைக்கள் பிடிக்கும், மேலும் யமஹா வகை பைக்குகளை வாங்க இளைஞர்கள் ஆசைப்படுகிறார்கள் என வணிகர் சங்க மாவட்ட தலைவர் ஜே பி சரவணன் தெரிவித்தார்.முன்னதாக புதிய வகை பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் புதிய இருசக்கர வாகனங்களை மகிழ்ச்சியுடன் ஓட்டிச் சென்றனர்.









