கல்லூரி மாணவியரிடம் தங்கச் செயின் பறித்த வாலிபர் கைது

கோவை ஆகஸ்ட் 1 கோவைபீளமேடு, காந்தி மாநகர் ஹட்கோ காலனியை சேர்ந்தவர் கோபாலன். இவரது மகள் பொன்னிகா ( வயது 20) இவர் கோவை புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பஸ்சில் கல்லூரிக்கு செல்வது வழக்கம்.நேற்று இவர்கல்லூரிக்கு செல்லும் வழியில் உக்கடம் என்.எச் ரோடு பகுதியில் செருப்பு வாங்குவதற்காக நடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கல்லூரி மாணவி பொன்னிகா உக்கடம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்கு பதிவு செய்து செல்வபுரம், கல்லா மேடு, முத்துசாமி காலனியை சேர்ந்த ரிசாத் (வயது 25) என்பவரை கைது செய்தார்.மேலும் விசாரணை நடந்து வருகிறது.