பட்டப்பகலில் வயர் திருடிய வாலிபர் கைது

கோவைஜலை 5கோவை இந்திரா நகரை சேர்ந்தவர் கவுதம் ராஜ் (30). கட்டிட காண்டிராக்டர். இவர் செல்வபுரம் அமுல் நகர் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று வழக்கம் போல காலை கட்டுமான பணி நடைபெறும் .இடத்திற்கு சென்றார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் கட்டிடத்தில் புதிதாக பொருத்தப்பட்டு இருந்த வயர்களை எடுத்து கொண்டு இருந்தார். இதனை பார்த்த கவுதம் ராஜ் அந்த வாலிபரிடம் விசாரித்தார். இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். உடனே கவுதம் ராஜ் அந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் வயர் திருடியது செல்வபுரம் தேவேந்திர வீதியை சேர்ந்த பாஸ்கர் (28) என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.