கோவை மே 12 கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் குப்பை கிடங்கியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டப்பட்டது .பின்னர் அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. அங்கு தினமும் மர்ம ஆசாமிகள் மது அருந்துவது, விபச்சாரம் போன்ற பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் காலையில் பலர் அந்த பகுதியில் நடைப்பயிற்சி செய்து வருகிறார்கள் .இந்த நிலையில் நேற்று காலை அங்கு சிலர் நடை பயிற்சி செய்தனர். அப்போது ஒரு வித துறநாற்றம் வீசியது. உடனே அவர்கள் துர்நாற்றம் வீசிய இடத்துக்கு சென்று பார்த்த போது அங்கு கை – கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு வாலிபர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து போத்தனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த நபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் இறந்தவருக்கு 35 வயது இருக்கும்.அவரது வலது கையில் “அபர்ணா “என்று பச்சை குத்தப்பட்டுள்ளது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவரின் கை – கால்கள் கட்டப்பட்டு, நிலையில் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. மேலும் உடலில் தாக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்தது .எனவே மர்ம ஆசாமிகள் அந்த வாலிபரை கடத்தி வந்து கொலை செய்து பிணத்தை வீசி சென்று இருப்பது தெரிய வந்தது .இதையடுத்து போலீஸ் மோப்பநாய் கொண்டுவரப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி சிறிதுரம் ஓடியது .பின்னர் மீண்டும் அதே பகுதிக்கு வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0