கோவை அக்28 கோவை தெற்கு உக்கடம், லாரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சாதிக் அலி ( வயது 31) இவர் உக்கடம் பகுதியில் மாட்டு இறைச்சி கடை நடத்தி வந்தார் .திருமால் வீதியைச் சேர்ந்தவர் மொய்தீன் பாட்ஷா ( வயது 36) இவர் கடந்த 31- 10 – 2015 அன்று காலை 11 மணிக்கு தனது இறைச்சிக்கடையை பார்த்துக் கொள்ளுமாறு ஆசிஸ் என்ற தொழிலாளி யிடம் கூறிவிட்டு மார்க்கெட்டுக்கு சென்றார். அப்போது அங்கு வந்த சாதிக் அலி, மொய்தீன் பாஷாவின் கடையில் இருந்த ஆசிசிடம் கேட்காமல் 4 கிலோ இறைச்சியை எடுத்துச் சென்று உள்ளார் இது பற்றி ஆசிஸ் மொய்தீன் பாஷாவிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மொய்தீன் பாஷா நண்பர்களுடன் சாதிக் அலியின் இறைச்சி கடைக்கு சென்று தட்டி கேட்டு உள்ளனர். உடனே சாதிக் அலி 4 கிலோ இறைச்சிக்காக எனது ஏரியாவுக்கே வந்து மிரட்டுகிறாயா? என்று கேட்டு கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.அதற்கு மொய்தீன் பாஷாவும் சாதிக் அலிக்கு சவால் விட்டு சென்றுள்ளார். இதை யடுத்து இந்த பிரச்சனை தொடர்பாக பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று சாதிக் அலியின் நண்பர்கள் மொய்தீன் பாட்ஷாவை போனில் அழைத்துள்ளனர். அதை நம்பிய மொய் தின் பாஷா சந்திரன்லே அவுட்டை சேர்ந்த தனது நண்பரான அபிப் முகமது ( வயது 27)என்பவருடன் இடையர் வீதி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு வந்த சாதிக் அலி திடீரென்று மொய்தின் பாஷாவுடன் தகராறு செய்து சரமாரியாக தாக்கினார் .மேலும் அபிப் முகமதுவையும் தாக்கினார்..இதை யடுத்து சாதிக் அலி திருமால் வீதியைச் சேர்ந்த மன்சூர் அலி , உக்கடம் லாரிப்பேட்டையை சேர்ந்த ஷேக் ஜாகீர், அஸ்கர் அலி அசாருதீன் ஆகி யோருடன் சேர்ந்து மொய்தீன் பாஷா மற்றும் அபிப் முகமதுஆகியோரைசரமாரியாக கத்தியால் குத்தினார்கள் இதில் படுகாயம் அடைந்த மொய்தீன் பாஷா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார் அபிப் முகமது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இந்த இரட்டை கொலை குறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சாதிக் அலி, ஷேக், அஸ்கர் அலி, மன்சூர் அலி,, ஜாகீர், அசாருதீன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் சேக் இறந்து விட்டார் .இரட்டை கொலை வழக்கு விசாரணை கோவை 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து நீதிபதி சிவக்குமார் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் கொலை குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், கூட்டு சேர்ந்து கொலை சதியில் ஈடுபட்டதற்கு ஆயுள் தண்டனை என இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார் இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மோகன் பிரபு ஆஜராகி வாதாடினார்.ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள்கோவை மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர். 5 பேருக்குஇரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





