போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தகவல்.கோவை செப்டம்பர் 12கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறியதாவது:- கோவை மாநகர பகுதியில் இரு கூரில் இருந்து வடகோவை, வடகோவையில் இருந்து போத்தனூர், இருகூரிலிருந்து போத்தனூர், வடகோவையில் இருந்து துடியலூர் ஆகிய பகுதிகளில் மட்டும் 50 கிலோமீட்டர் தூரத்துக்கு ரயில் தண்டவாளம் உள்ளது. தண்டவாள பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைந்திருக்கும். எனவே அந்த வழியாகமர்ம ஆசாமிகள் நடந்து வந்து குடியிருப்புக்குள் புகுந்து குற்ற சம்பவங்கள் ஏற்படுத்துவதை தடுக்க தண்டவாளத்தை ஒட்டி இருக்கும் பகுதியில் 150 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கேமராக்கள் அனைத்தும் மாநகர காவல் துறை கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படஉள்ளது .தேவைப்பட்டால் கூடுதல் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தவிர 24 மணி நேர ரோந்து பணியில் உள்ள போலீசாரும் தண்டவாள பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் எனவே சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனே அருகே உள்ளகாவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவர் அவர்கூறினார்..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0