கோவை செப்டம்பர் 10 கோவை ஆர். எஸ். புரம். சுந்தரம் வீதி,கிருஷ்ணப்பா தெருவில் வசிப்பவர் முருகேசன். இவரது மகன் சுப்பிரமணி ( வயது 38) இவர் சாமி ஐயர் புது வீதியில் உள்ளசபாபதி என்பவரது நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.இவர் நேற்று அவரது வீட்டில் மின்விசிறியில் மனைவியின் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி சங்கரேஸ்வரி ஆர். எஸ் .புரம். போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் முத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.இதேபோல கோவை புலியகுளம், நாராயணன் வீதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி.இவரது மனைவி செல்வி ( வயது 45)இவரது கணவர் குடிப்பழக்கம் உடையவர். வீட்டு செலவுக்கு சரவர பணம் கொடுப்பதில்லை. இதனால் மன அழுத்தத்துடன் காணப்பட்ட செல்வி நேற்று அவரது வீட்டில் விட்டத்தில் சேலையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இது குறித்து அவரது மகன் சுரேஷ் ராமநாதபுரம் போலீஸ் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதேபோல மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஆலிப் (வயது 21 )இவர் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில், நாயக்கர் தோட்டத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார்.இவர் நேற்று ஒரு பெண்ணிடம் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம் .பிறகு தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.காதலியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது .இது குறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0