வெள்ளலூர் குப்பை கிடங்கியில் பயங்கர தீ விபத்து

கோவை செப்டம்பர் 17 கோவை அருகே உள்ள வெள்ளலூரில்மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கிஉள்ளது.மாநகரில் உள்ள அனைத்து குப்பைகளும் இங்குதான் கொட்டப்படுகிறது.இந்த குப்பை கிடங்கியில் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவது வழக்கம்..நேற்றிரவு திடீரென்று தீப்பிடித்தது.காற்று அதிகமாக இருந்ததால் தீ மள,மள,வென பரவியது.இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தீயணைப்பு படையினர் 5 வாகனங்களில் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.