மகனுக்கு திருமணம் முடிய தாமதமானதால் தந்தை தூக்கு போட்டு தற்கொலை

கோவை செப்டம்பர் 19 கோவை அருகே உள்ள வடவள்ளி, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் அண்ணாமலை ( வயது 76 )இவரது மகனுக்கு 40 வயது ஆகியும் திருமணமாகவில்லை. இதனால் அண்ணாமலை மன அழுத்தத்துடன் காணப்பட்டார்.எல்லோரிடமும் மகனுக்கு திருமணம் ஆகவில்லையே? என்று புலம்பி வந்தார்,இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் நைலான் கயிற்றை மின்விசிறியில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மகள் உமா வடவள்ளி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.