அனுமதியில்லாமல் பேனர் வைத்த அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு

கோவை செப்டம்பர் 11 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.இதையொட்டி கோவை, பேரூர்,தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி,கிணத்துக்கடவு ஆனைமலை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல்துறை அனுமதி பெறாமல் பெரிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.இவைகள்காவல்துறையால் கண்டறியப்பட்டன. அனுமதியின்றி பேனர் வைத்ததாக அதிமுக நிர்வாகிகள் மீது தொண்டாமுத்தூர், பேரூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட காவல் நிலையங்களில் தலா 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.