கோவை செப்டம்பர் 20 கோவை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தவர்கள் சூடான் நாட்டைச் சேர்ந்த அல்பரலி முகமத் ( வயது 29) மற்றும் சுலைமான் ( வயது 26) இதில் சுலைமான்கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தா.ர் இருவரது விசாவும் காலாவதி ஆகியும் இங்கே தங்கி இருந்துள்ளனர். மேலும் அல்பரலி , முகமத் மெத்த பெட்ட மின் போதை மாத்திரை வைத்திருந்த வழக்கிலும் கைதாகி ஜாமீரில் வெளியே வந்தார் .இந்த நிலையில் தலைமறைவான இருவரையும் கண்டுபிடித்து கைது செய்து திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் இருவரும் போலீசார்தேடி வந்தனர் .இந்த நிலையில் சுலைமான் மற்றும் அல்பரலி முகமத் ஆகியோர் சென்னையில் இருப்பது தெரியவந்தது. சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மொழிபெயர்ப்பாளராக பணியில் இருந்து வந்துள்ளார். விசாரணையில்கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சென்னை சென்ற சூலூர் போலீசார் இருவரையும் நேற்று கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0