முள்புதரில் வாலிபர் பிணம். கொலையா?

கோவை செப்டம்பர் 11 கோவை போத்தனூரில் இருந்து செட்டிபாளையம் செல்லும் ரோட்டில் ஈஸ்வரன்நகர் உள்ளது இங்குள்ள முட்புதற்குள் நேற்று ஒரு வாலிபர் பணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்துபோலீசுக்கு தகவல் தெரியப்பட்டது. போலீஸ் விசாரணையில் இறந்து கிடந்தவர் கோணவாய்க்கால் பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 29 )என்பது தெரிய வந்தது அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தெரியவில்லைஅவரது உடல்பிரேத பரி சோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.